ஹைதராபாத்: தெலுங்கானாவில் மகளிர் கல்லுாரி ஆய்வுக் கூடத்தில் ரசாயன ‘காஸ்’ கசிவால் பாதிக்கப்பட்ட ௨௫ மாணவியர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹைதராபாதில் உள்ள மகளிர் கல்லுாரியின் ஆய்வுக் கூடத்தில், மாணவியர் நேற்று ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென காஸ் கசிந்து ஆய்வுக்கூடம் முழுக்க பரவியது. இதையடுத்து, மாணவியருக்கு மூச்சுத் திணறலும், தலைச் சுற்றலும் ஏற்பட்டது. உடனே அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கல்லுாரி நிர்வாகத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு, மாணவியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். காஸ் கசிவு குறித்து, தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement