கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே தொடரை கைப்பற்றிய வீரர்!


அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே வெற்றியை பெற்றதுடன், ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளார்.

28வது கேப்டன் 

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்தது.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது.

முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு பேட் கம்மின்ஸ் தலைமை வகித்த நிலையில், டெஸ்ட் தொடருக்காக அவருக்கு ஓய்வு தேவை என்பதால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் கேப்டனாக செயல்பட்டார்.

தனது 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக அவுஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக அவர் களமிறங்கினார்.

அவுஸ்திரேலியாவின் 28வது கேப்டன் என்ற பெருமையுடன் விளையாடிய ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே தொடரை கைப்பற்றிய வீரர்! | Hazelwood First Victory As Debut Captaincy

@ICC

மிரட்டல் பந்துவீச்சு

மேலும் ஸ்டார்க், ஜம்பா ஆகியோர் சிறப்பாக பந்துவீசியதால் இங்கிலாந்து 208 ஓட்டங்களில் சுருண்டது.

இந்த வெற்றியின் மூலம் கேப்டனாக பதவியேற்ற முதல் போட்டியிலேயே ஹேசல்வுட் வெற்றியை பெற்றுள்ளார். அத்துடன் முதல் போட்டியில் ஏற்கனவே அவுஸ்திரேலிய அணி வென்றிருந்ததால் தொடரையும் கைப்பற்றியது.

இதனால் மகிழ்ச்சியடைந்த ஹேசல்வுட் போட்டிக்கு பின் கூறுகையில், ‘இது மிகவும் உற்சாகமாகவும், கொஞ்சம் பதற்றமாகவும் இருந்தது. எனினும் நிச்சயமாக நான் அதை ரசித்தேன்.

ஆரம்பத்தில் என்னுடைய பந்துவீச்சைக் காட்டிலும் மற்றவர்களின் பந்துவீச்சைப் பற்றி நான் யோசித்தேன்.

கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே தொடரை கைப்பற்றிய வீரர்! | Hazelwood First Victory As Debut Captaincy

@Getty

இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் நிறைய கிரிக்கெட் விளையாடினர். அவர்களுக்கு அவர்களின் களங்கள் தெரியும் என்பதால், என்னால் முடிந்தவரை அவர்களின் வழியில் இருந்து விலகி இருந்தேன்’ என தெரிவித்துள்ளார்.

ஜோஷ் ஹேசல்வுட் 68 ஒருநாள் போட்டிகளில் 107 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.