தாய்லாந்து நாட்டில் சீன அதிபர் ஜி ஜீன்பிங்கும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாங்காக்கில் ஆசிய – பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள சென்ற 2 பேரும், மாநாட்டின் இடையே சந்தித்து பேசினர்.
அப்போது, வடகொரியா ஏவுகணை சோதனை விவகாரம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.