வங்கி வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்திய சுமூக உடன்படிக்கை!

ஊழியர்களை பணியிட மாற்றம் செய்வது, ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்காதது போன்றவற்றை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அகில இந்திய சம்மேளனம் அறிவித்திருந்தது.

வங்கி

தொழிற்சங்க உரிமைகளை பறித்தல், பணியிட மாற்றம் செய்தல், பல ஒப்பந்தங்கள் அமல்படுத்தாமல் இருத்தல் ஆகியவயை எதிர்த்து இன்று வேலை நிறுத்தம் செய்வதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அறிவித்திருந்தார்.

இதுகுறித்து கடந்த 5-ம் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் வங்கி ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பின்னர், கடந்த 10-ந் தேதி டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இதில் வங்கிகளின் நிர்வாக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. பிறகு, கடந்த புதன்கிழமையும் நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

வங்கி வேலை நிறுத்த போராட்டம்

இதையடுத்து டெல்லியில் நேற்று தொழிலாளர் நல ஆணையர் தலைமையில், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் வங்கி ஊழியர் சங்கம் நடந்திய பேச்சுவார்த்தையில் சமூக உடன்படிக்கை ஏற்பட்டது. இதனால் இன்று நடக்கவிருந்த வங்கி வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டு வங்கிகள் இயங்கின.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.