இறந்த காதலியின் உடலை மணந்த காதலன்! இனி திருமணம் தனக்கு கிடையாது என சபதம்


காதலியின் இறந்த உடலுடன் மாலையை மாற்றி கொண்டு திருமணம் செய்த அசாம் இளைஞரின் செயல் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உயிரிழந்த காதலி

அசாம் மாநிலத்தில் மோரிகானில் வசிக்கும் பிதுபன் டமுலி மற்றும் கொசுவா கிராமத்தில் வசிக்கும் பிராத்தனா போரா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர், இருவீட்டார்களுக்கும் இவர்களுடைய காதலும் திருமண திட்டமும் தெரிந்ததே.

இந்நிலையில் காதலி பிராத்தனா போரா சிறிது நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டு கவுகாத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், ஆனால் மருத்துவ சிகிச்சைகள் போதிய ஆதரவு வழங்காத நிலையில் பிராத்தனா வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இறந்த காதலியின் உடலை மணந்த காதலன்! இனி திருமணம் தனக்கு கிடையாது என சபதம் | Love Youth In Assam Marries Dead Girlfriend Bitupan Tamuli & Prathana Bora – பிதுபன் டமுலி & பிராத்தனா போரா

காதலன் எடுத்த முடிவு

காதலி உயிரிழந்து விட்டால் என்ற சோகம் தாங்காத காதலன் பிதுபன், இறுதி சடங்கு நடைபெறும் பிராத்தனாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தான் பிராத்தனாவை திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்துவிட்டு, பிராத்தனாவின் இறந்த உடலுக்கு அலங்கரிக்கும் சிவப்பு பூசியை கன்னங்கள் மற்றும் நெற்றியில் பூசி விட்டு, அவள் கழுத்தில் மாலையை அணிவித்துள்ளார், பின் அவள் உடல் முழுவதும் தொட்டு எடுத்து மற்றொரு மாலையை தனது கழுத்திலும் போட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் தனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும், இனி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் சபதம் செய்துள்ளார்.

இறந்த காதலியின் உடலை மணந்த காதலன்! இனி திருமணம் தனக்கு கிடையாது என சபதம் | Love Youth In Assam Marries Dead GirlfriendBitupan Tamuli & Prathana Bora –  பிதுபன் டமுலி & பிராத்தனா போரா

பிராத்தனா மற்றும் பிதுபன் இருவரது திருமணம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிராத்தனாவின் குடும்பம் அதிர்ச்சி

பிராத்தானவை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என பிதுபன் தெரிவித்ததும் அதிர்ச்சியடைந்த பிராத்தனாவின் குடும்பம் பேச்சற்ற நிலைக்கு சென்றுள்ளது.

பிராத்தனாவின் சகோதரர் சுபோன் தெரிவித்த கருத்தில், தனது சகோதரியை ஒருவர் இந்த அளவிற்கு காதலிக்கிறார் என்று எங்களால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் அவன் அழுது கொண்டே எல்லா சடங்குகளையும் செய்ததை நாங்கள் பார்த்தோம், என் சகோதரி உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அவள் பிதுபனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள்,  அதைப்போல அவளுடைய இறுதி விருப்பத்தை பிதுபன் நிறைவேற்றினான், வேறு என்ன சொல்ல வேண்டும் என சகோதரர் சுபோன் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.