நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சியாளர்களே காரணம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை அறிவுள்ளவர்கள் நிர்வகித்திருந்தால் நாடு இவ்வாறானதொரு நெருக்கடியில் சிக்கியிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடினமான தீர்மானங்கள்
மாத்தறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் கடினமான தீர்மானங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும் ஆளுநர் கூறினார்.