கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் அசக்களத்தூரில் தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கிழக்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி அமுதாவுக்கு மருத்தகத்தில் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. பெண்ணுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மருந்தகத்தில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
