“கிளைபோசெட்” பயன்பாட்டுத் தடை நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாஸ சமரசிங்க தெரிவித்தார்.
ஏழு வருடங்களுக்குப் பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் . இதுவிடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கிளைபோசெட் இரசாயன பதார்த்த்தை பயன்படுத்துவதா இல்லையா என்பது குறித்து ஆராய்ந்த பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, அமைச்சின் செயலாளர் குணதாஸ சமரசிங்க மேலும் தெரிவித்தார்.