டமாஸ்கர்-சிரியாவின் வடக்கு மாகாணங்கள் மீது துருக்கி ராணுவம் 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியும். விமானங்கள் வாயிலாகவும் தாக்குதல் நடத்தியதால், அங்கு பதற்றம் நிலவுகிறது.
தேசிய ஆசிய நாடுகளான துருக்கியும், சிரியாவும் அண்டை நாடுகள். சிரியாவில் 2011 முதல் உள்நாட்டு கிளர்ச்சி நடந்து வருகிறது.
இதனால் இங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் குண்டு வெடித்தது. இதில், ஆறு பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கு சிரிய படைகளும், அவர்களது ஆதரவு பெற்ற குர்திஷ் பயங்கரவாத அமைப்பும் தான் காரணம் என துருக்கி குற்றஞ்சாட்டியது.
இதையடுத்து, சிரியாவின் வடக்கு மாகாணமான கோபனே நகரை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி துருக்கி தாக்குதல் நடத்தி உள்ளதாக சிரியாவின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது. போர் விமானங்கள் வாயிலாகவும் குண்டுகளை வீசி துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஈராக் நாட்டிலும் துருக்கி போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிரியாவில் நடந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement