செங்கல்பட்டு மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் விஞ்சியம்பாக்கம் ஈஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சந்திரசேகர்(55). இவருடைய வீடு ரயில்வே தண்டவாளத்தில் அருகே அமைந்துள்ளது.
இந்நிலையில் சந்திரசேகர் நேற்று காலை வழக்கம் போல் வெளியே செல்வதற்கு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக தாம்பரம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சந்திரசேகர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், சந்திரசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.