நாளை சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது சென்னையில் இருந்து சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால், நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

நாளை மறுநாள் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், தமிழக – புதுவை கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.