புதிய வீட்டில் காலை உணவு சாப்பிட்டு சென்ற பிரபல நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் திடீர் தற்கொலை


பிரபல நட்சத்திர ஓட்டலான ராடிசன் புளூவின் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Radisson Blu hotel உரிமையாளர் தற்கொலை

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில், காஜியாபாத்தின் கௌசாம்பியில் உள்ள ரேடிசன் ப்ளூ ஓட்டலின் (Radisson Blu hotel) உரிமையாளர் அமித் ஜெயின் (Amit Jain), காமன்வெல்த் விளையாட்டு (CWG) கிராமத்தில் உள்ள அவரது கிழக்கு டெல்லி இல்லத்தில் சனிக்கிழமை இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அமித் ஜெயின், அவரது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார், ஆனால் அவரது உடலிலோ அல்லது அருகிலோ தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

புதிய வீட்டில் காலை உணவு சாப்பிட்டு சென்ற பிரபல நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் திடீர் தற்கொலை | Raddison Blu Hotel Ownerghaziabad SuicidePhoto: Amarujala

மண்டவாலி காவல் நிலையத்திற்கு வந்த பிசிஆர் (police control room) அழைப்பின் மூலம் தற்கொலை குறித்த தகவல் பொலிஸாருக்கு கிடைத்தது.

முதற்கட்ட விசாரணையில்

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், ஜெயின் தனது குடும்பத்துடன் நொய்டாவுக்கு மாற திட்டமிட்டிருந்த நிலையில், சனிக்கிழமை அவர் நொய்டாவில் உள்ள தனது புதிய வீட்டில் காலை உணவை சாப்பிட்டுவிட்டு காலையில் CWG கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தது தெரியவந்தது.

அவர் செல்லும் வழியில், அவர் தனது சகோதரர் கரனை காஜியாபாத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இறக்கிவிட்டார். பின்னர், அவர் தனியாக CWG-க்கு காரை ஓட்டிச்சென்றார் பொலிஸார் கூறினர்.

தூக்கில் தொங்கிய நிலையில்

தனது டிரைவருடன் சிலவற்றை எடுக்க CWG குடியிருப்புக்குச் சென்ற ஜெயின் மகன், தனது தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டார். அவர் உடனடியாக Max Patparganj மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் எந்தவிதமான முறைகேடுகள் நடந்ததாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை, மேலும் விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.