புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டியதால், கழிவுநீர் வாய்க்காலை பொதுமக்களுடன் இணைந்து இளைஞர் ஒருவர் தூர்வாரி சுத்தம் செய்த நிகழ்வு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி 11 வார்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் அஜித், இவர் தனது தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் கட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி குடிநீரில் கலக்கும் அவலமும் காண முடிந்தது, மேலும் கழிவுநீர் அங்காங்கே தேங்கி கொசுக்கள் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாமலே கழிவுநீர் கால்வாய் நிரம்பி வழிந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழையும் பெய்து வருவதால், மழை பெய்தால் மழை தண்ணீரோடு கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
இந்நிலையில் கழிவுநீர் கால்வாயில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதால், இனி ஊராட்சி நிர்வாகத்தை நம்பி பயனில்லை என்று சம்பந்தப்பட்ட இளைஞர் அஜித் அந்த பகுதி மக்களோடு இணைந்து கழிவு நீர் கால்வாயை தாமாக முன்வந்து சுத்தம் செய்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
