புற்றுநோயிலிருந்து மீண்ட 24 வயது இளம் நடிகை மாரடைப்பால் மரணம் – சோகத்தில் திரையுலகம்

புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பிரபல பெங்காலி நடிகை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிரபல பெங்காலி நடிகை ஆண்ட்ரிலா சர்மா, கடந்த 20 நாட்களாக  மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு அவருக்கு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் சிபிஆர் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனளிக்காததால் நடிகை ஆண்ட்ரிலா சர்மா இன்று மதியம் உயிரிழந்தார்.

image
நடிகை ஆண்ட்ரிலா சர்மா கடந்த நவம்பர் 1ஆம் தேதி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைக்குள் ரத்தக்கசிவு இருப்பதைக் கண்டறிந்தனர், இதன் காரணமாக பக்கவாதம் ஏற்பட்டு அவரது உடலின் ஒரு பக்கம் செயலிழந்து கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நடிகை ஆண்ட்ரிலா சர்மா ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

image
24 வயதில் நடிகை ஆண்ட்ரிலா சர்மா மரணமடைந்த செய்தி திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: பிரபல டிவி நடிகை சாலை விபத்தில் உயிரிழப்பு – ரசிகர்கள் சோகம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.