நியூயார்க்-அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, சமூக வலைதளமான ‘டுவிட்டர்’ நீக்கியுள்ளது. இதையடுத்து, டுவிட்டரில் டிரம்பின் கணக்கு மீண்டும் செயல்படத் துவங்கி உள்ளது.
அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், 2020ல் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.
மேலும், சமூக வலை தளங்களான ‘பேஸ்புக்’ மற்றும் ‘டுவிட்டர்’ஆகியவற்றில் டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் அரசுக்கு எதிரான தகவல்களை பதிவு செய்து வந்தனர்.
இதையடுத்து, டொனாலடு் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கணக்குகளை 2021 ஜனவரியில் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் முடக்கின.
இந்நிலையில், உலகின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தி அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கணக்கை மீண்டும் இயக்கலாமா என அவர் டுவிட்டரில் கருத்து கேட்டிருந்தார். இதற்கு 51.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து, டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு நேற்று முதல் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளது. ஆனால், பேஸ்புக் நடத்தும் மெட்டா நிறுவனம், டிரம்ப் மீதான தடையை இன்னும் நீக்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement