மும்பையில் 150 ஆண்டுகள் பழமையான கார்னாக் பாலம் இடிப்பு தீவிரம்!| Dinamalar

மும்பை: மும்பையில் பழமையான ரயில்வே கார்னாக் பாலம், 150 ஆண்டுகளை கடந்து விட்டதால் இடிக்கும் பணியை மத்திய ரயில்வே மேற்கொண்டு வருகின்றது.

மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் – மஸ்ஜித் பண்டர் புறநகர் ரயில் பாதையில் கார்னாக் சாலையின் மேல் கட்டப்பட்ட பாலம் 150 ஆண்டுகளை கடந்து விட்டது. இதனால் பாலத்தை உடைக்கும் பணியை நேற்று இரவு 11 மணியளவில் மத்திய ரயில்வே துவக்கி உள்ளது.

450 டன் எடையுள்ள இரும்பு பாலத்தை அகற்ற, மொத்தம் 500 பேர் பாலத்தை இடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே வேளையில் குப்பைகளை அகற்ற நான்கு கிரேன்கள் (350 டன்களில் மூன்று மற்றும் 500 டன்களில் ஒன்று) மற்றும் நான்கு ஹைட்ரா கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால், இந்த ரயில் வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை பாலத்தை இடிக்கும் பணி 50 சதவீதம் வரை முடிந்துள்ளதாக மத்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.