திருச்சி: திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில், உண்மை கண்டறியும் சோதனைக்கு 12 ரவுடிகள் சம்மதம் தெரிவித்தனர். முதல்கட்டமாக நேற்று முன்தினம் 6 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, மேலும் 5 பேருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடந்தது. கடலூரை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. ரவுடிகள் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி இருந்தது.
