வளர்ச்சிக்கு பா.ஜ.க. முன்னுரிமை கொடுப்பதால் தான், தேர்தலின்போது இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளுக்குக்கும் வளர்ச்சியை பற்றி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் போதாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பா.ஜ.க. அரசு சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தததாக கூறினார்.
ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர், அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக, குஜராத்தில் பிரசித்திப் பெற்ற சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.