ஆட்டோ டிரைவர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை.. போலீசார் விசாரணை.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.’

அஞ்செட்டியை சேர்ந்த முரளி காதல் மனைவியை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக மகளுடன் தனியே வசித்து வந்தார். நேற்று அஞ்செட்டி பேருந்துநிலையம் அருகே முரளி மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

முரளிக்கும் அவரது தம்பி தேவராஜூக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே சொத்து தகராறு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.