ஏலகிரி விரைவு ரயிலில் ஆபத்தை உணராமல் ரயில்பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் மீது ஆபத்தான முறையில் பயணிக்கும் பயணிகள்..!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை முதல் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் வரை இயக்கப்படும் ஏலகிரி விரைவு ரயிலில், பயணிகள் சிலர் ஆபத்தான முறையில் பயணிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினசரி காலை 9 மணிக்கு சென்னை வரும் அந்த ரயிலில், அலுவலகம், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் என ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கூட்ட நெரிசலால் ரயில் பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் மீது நின்று பயணிகள் சிலர் பயணிக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இதுபோன்று பயணிப்பவர்களை, ரயில்வே போலீசார் எச்சரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.