வங்கதேசத்தில் காதலியை கொலை செய்து, பல துண்டுகளாக கூறு போட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், அவரது காதலரால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதன் பரபரப்பு அடங்குவதற்குள் அண்டை நாடான வங்கதேசத்திலும் இதே போன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கேள்வி கேட்டதால் கொலை
வங்கதேசத்தின் கோபர்சக்கா சதுக்கத்தில் அபுபக்கர் சித்திக் என்ற நபர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
எனினும், தனக்கு திருமணமானதை மறைத்து கவிதா ராணி என்ற பெண்ணுடன் அபுபக்கர் பழகி வந்துள்ளார்.
இருவரும் அபுபக்கரின் மனைவி வீட்டில் இல்லாத சமயம் பார்த்து தனிமையில் இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அபுபக்கருக்கு திருமணமான விடயம் கவிதா ராணிக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் அவர் சண்டையிடவே, ஆத்திரமடைந்த அபூபக்கர் காதலியை கொலை செய்துள்ளார்.
அத்துடன் அவரது தலையை துண்டித்த அவர், கைகளையும் வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு சாக்கடையில் வீசியுள்ளார்.
பல துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி
மேலும் உடலின் மற்ற பாகங்களையும் பல துண்டுகளாக வெட்டி பெட்டிக்குள் போட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
பின்னர் டாக்காவுக்கு தப்பிச் சென்ற அபுபக்கரை சௌரஸ்தா பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அபுபக்கர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதற்கிடையில் கவிதா ராணியின் துண்டிக்கப்பட்ட கைகள் கோபர்சகா பகுதியில் மீட்டெடுக்கப்பட்டது.
பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு, பல துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.