சென்னையில் அதிக மழைபெய்ய வாய்ப்பில்லை என்று, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) தகவல் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்வதால், சென்னைக்கு அருகே நடுக்கடலில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “இன்று அதிகாலை முதல் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று அப்படியான மழை எந்த பகுதியிலும் பெய்யவில்லை.
அடுத்த 3 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 24-ல் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளதால், சென்னையில் பகல் நேரத்தில் குளிர் இருக்கும். டிசம்பர் மாதத்தில் சராசரியைவிட அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.