தமிழகத்தில் கடந்த மாதம் முதல் பருவ மழை தொடங்கி தீவிர மடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இஇதற்கிடையே அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் வீட்டின் உள்ளே இருந்த 12 வயது சிறுவனின் முகம் சிதைந்துள்ளது. இதில், படுகாயமடைந்த சிறுவன் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், “விபத்து ஏற்பட்ட வீடு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று மேலும் 22 அரசு தொகுப்பு வீடுகள் அந்த பகுதியில் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.