பசிலை கண்டுக்கொள்ளாத ராஜபக்ஷ குடும்பம்


அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை ராஜபக்ஷ குடும்பத்தினர் கண்டுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பசில் ராஜபக்ஷவை வரவேற்பதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, பிரசன்ன ரணவீர, சனத் நிஷாந்த, சாந்த பண்டார, பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லோககே, எஸ்.எம். சந்திரசேன, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் சென்றிருந்தனர்.

பசிலை கண்டுக்கொள்ளாத ராஜபக்ஷ குடும்பம் | The Rajapaksa Family Did Not Recognize Basil

எனினும் அவரை வரவேற்க ராஜபக்ச குடும்பத்தினர் யாரும் அங்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

பசிலை கண்டுக்கொள்ளாத ராஜபக்ஷ குடும்பம் | The Rajapaksa Family Did Not Recognize Basil

கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே பசில் ராஜபக்ஷ இலங்கை வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த விஜயம் கட்சிக்கு பலம் எனவும், உறுப்பினர்கள் கிராமங்கள் தோறும் சென்று வாக்கு சேகரிக்க ராஜபக்ஷர்கள் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று விமான நிலையத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.