சென்னையில் வசித்து வருகின்ற 56 வயது பெண்மணி ஜிம்மில் புடவையை கட்டிக்கொண்டு உடற்பயிற்சி செய்கின்ற ஒரு வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 56 வயதாகிய அந்த பெண்மணி கால் மற்றும் முழங்கால் உள்ளிட்ட இடங்களில் வலி மற்றும் வேதனை காரணமாக அவதிப்பட்டு வந்து இருக்கின்றார்.
இத்தகைய நிலையில் அந்த பெண்ணின் மகன் அன்றாடம் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய சொல்லி அறிவுறுத்தி இருக்கின்றார். அத்துடன் அவரது மருமகளுடன் சேர்ந்து தினம் தினம் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 56 வயது பெண்மணி ஜிம்மில் புடவையை கட்டிக்கொண்டு உடற்பயிற்சி செய்கின்ற செயல் தற்போது ஆச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது.