நாமக்கல் மாவட்ட பகுதியில் போடாம்பில்பட்டியில் ரஞ்சித் மற்றும் மிதுனாதேவி என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மகன் வினித் அரசு ஆரம்ப பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
சென்ற 13ம் தேதி வீட்டிற்கு அருகாமையில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தத வினித் சாக்லெட் என்று நினைத்து எலி பேஸ்ட்டை தின்றுள்ளார். இதனை கண்ட மிதுனாதேவி அதனை பறித்து வீசியுள்ளார்.
அதன் பிறகு வினித் சிறிது நேரத்திலே வாந்தி எடுத்து சட்டென்று மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த வினித்தை தாயார் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் வினீத் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். எலி பேஸ்டை தவறுதலாக தின்ற குழந்தை பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.