ராபர்ட்டுக்கு மகள் மீது அவ்வளவு பாசமா? – ராதிகா மாஸ்டரின் பளீச் பேட்டி

பிக்பாஸ் வீட்டில் விளையாடி வரும் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவை க்ரஷ் என சொல்லிக் கொண்டு விடாமல் அவர் பின்னாலேயே சுற்றி வருகிறார். ரொமான்ஸ் என்ற பெயரில் அவர் அடித்து வரும் கூத்துகள் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியேயும் பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அதிலும், இந்த வாரம் ராபர்ட் – ரச்சிதாவுக்கு இடையே படுபயங்கரமான செண்டிமெண்ட் காட்சிகளும் அரங்கேறியது.

இந்நிலையில், ராபர்ட் மாஸ்டர் குறித்து பிரபல டான்ஸ் மாஸ்டர் ராதிகா அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது ராபர்ட்டுக்கும் அவரது மகளுக்கு இடையேயான தொடர்பு பற்றிய பேசிய ராதிகா, 'ராபர்ட் மாஸ்டர் தன் மகளை நினைவு வைத்திருப்பதை பார்க்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் போய்தான் மகளை பற்றி பேச வேண்டுமா?. ராபர்ட்டுக்கு தனது மகள் எங்கே இருக்கிறாள் என்று தெரியும். நேரில் போய் பார்த்து பேசியிருக்கலாம். அவர் நன்றாக சம்பாதிக்கிறார் மாதம் மாதம் பணம் அனுப்பி உதவி இருக்கலாம். இதையெல்லாம் செய்யாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று குழந்தை பாசத்தை காட்டுவது டிஆர்பிக்காக தான் என்று நினைக்க தோன்றுகிறது' என்று கூறியுள்ளார். ஏற்கனவே, ராபர்ட் மாஸ்டரை கலாய்த்து வரும் நெட்டீசன்கள், ராபர்ட் மாஸ்டரின் மகள் செண்டிமெண்ட் பொய் என்று தெரிந்த பின் அவரை விடாமல் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.