தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில், நேற்று இரவு கிடைத்த தகவலின் அடிப்படையில் வானிலை நிலவரம் நமது பொறுமையை பெரிதாக சோதிக்கப் போகிறது. இத்தகைய சூழல் வரும் என்று நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெகு தொலைவில் இருக்கிறது. இது சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி இன்று நள்ளிரவு நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மிகப்பெரிய அளவிலான அதீத கனமழை என்பது கடலிலேயே பெய்து விடும். அதில் கொஞ்சம் மட்டும் நிலப்பகுதிக்கு கிடைக்கும். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்களில் மழையின் தாக்கத்தை காணலாம். ஆனால் பொறுமை மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
