இறந்த காதலிக்கு தாலி கட்டி மணமுடித்த அசாம் இளைஞர்| Dinamalar

குவஹாத்தி, :உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த காதலிக்கு தாலி கட்டி, ‘இனி நான் வேறு திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என, அவரது உடல் மீது சத்தியம் செய்த இளைஞரை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வட கிழக்கு மாநிலமான அசாமின் மோரிகான் நகரில் வசிப்பவர் பிதுபன் தாமுலி. அருகிலுள்ள கோசுவா என்ற கிராமத்தில் வசித்தவர் பிரார்த்தனா போரா. இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இருவர் வீட்டிலுமே சம்மதம் தெரிவித்து திருமணத்துக்கான பேச்சும் நடந்து வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பிரார்த்தனாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குவஹாத்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 18ம் தேதி, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

காதலியின் மரணத்தால், பிதுபன் மனம் உடைந்தார். காதலி உடலைப் பார்த்து கதறித் துடித்தார்.

பின், உறவினர்கள் சம்மதத்துடன் இறந்த காதலி கழுத்தில் தாலி கட்டி, ‘இனி வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள மாட்டேன். இந்தப் பிறவியில் இவள்தான் என் மனைவி’ என சத்தியம் செய்தார். பிதுபனின் இந்த செயல், அங்கிருந்த எல்லாரையும் ஆச்சர்யப்பட வைத்தது.

இது குறித்து பிரார்த்தனாவின் அண்ணன் கூறியதாவது:-

என் தங்கையை இவ்வளவு ஆழமாக நேசித்த பிதுபனின் செயலை எங்களால் தடுக்க முடியவில்லை. அவள் இறந்த பிறகும் கூட, தன் மனைவியாகவே வழியனுப்பி வைத்த பிதுபனின் செயலால் நாங்கள் நெகிழ்ந்து போய் இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.