எரிபொருள் விநியோகத்திற்கான கியு.ஆர் முறை அடுத்த மாதம் முதல் நீக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருள் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வரை இந்த கியூ ஆர் முறை அமுலில் இருக்கும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகரதனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.