ரியாத், மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில், குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. கொலை, பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்தது என, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், ௮௧ பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ௧௨ பேருக்கு, கடந்த, ௧௦ நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. வாளால் கழுத்து துண்டிக்கப்பட்டு, இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில், மூன்று பேர் சவுதியைச் சேர்ந்தவர்கள். சிரியாவைச் சேர்ந்த நான்கு பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பேர், ஜோர்டானைச் சேர்ந்த இருவரும் இதில் அடங்குவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement