சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் காடையாம்பட்டி பகுதியில் வசித்த பூர்ணிமா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த பத்து நாட்களுக்கு முன் உறவினர்கள் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது.
திருமணமான 10 நாளில் பூர்ணிமா பக்கத்து வீட்டில் வசித்து வந்த அஜித்குமார் என்ற நபருடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனால், ஆத்திரமடைந்த பூர்ணிமாவின் தந்தை மாணிக்கம் தன்னுடைய சொந்தக்காரர்களுடன் சேர்ந்து அஜித்குமார் வீட்டிற்கு சென்று அங்கு வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி டெம்போவை தீ வைத்து எரித்துள்ளார்.
அத்துடன் அங்கிருந்த வைக்கோல் போருக்கும் தீ வைத்துள்ளார். இது குறித்து, அஜித்குமாரின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெண்ணின் தந்தை மாணிக்கம் அவர்களது உறவினர்கள் கணபதி, சுப்ரமணி உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருமணத்திற்கு முன்பாகவே அஜித் குமார் மற்றும் பூர்ணிமா இருவரும் காதலித்து வந்ததாகவும், இந்த காதலை ஏற்றுக் கொள்ளாத பூர்ணிமாவின் பெற்றோர் வேறொரு நபருடன் கட்டாயத் திருமணம் செய்து வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.