சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரியில் 254 உதவி பேராசிரியர்கள் நீக்கத்துக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. நீதிபதி சண்முகம் நடத்திய விசாரணையில் 150 உதவி பேராசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மட்டுமே தவறு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரியில் பணிபுரியும் 254 பேராசிரியர்களின் நியமனம் செல்லாது என ஐகோர்ட் நேற்று தீர்ப்பு அளித்தது. 254 பேராசிரியர்கள் பணி நியமனத்தை ஒட்டு மொத்தமாக ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது.