மகாராணியாரின் ஆசையை நிறைவேற்றப்போவதில்லை: மன்னர் சார்லஸ் எடுத்துள்ள முடிவின் முக்கிய பின்னணி…


தன் தாய் ஆசைப்பட்ட ஒரு விடயத்தை நிறைவேற்றப்போவதில்லை என மன்னர் சார்லஸ் முடிவெடுத்துள்ளார்.

மகாராணியாரின் ஆட்சிமுறை ஒருவிதமாக இருந்தது, மன்னர் சார்லசின் ஆட்சிமுறை வேறு மாதிரி இருக்கிறது. அவர் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு தன் தாயின் ஆட்சிமுறையைப் பின்பற்றாமல், வித்தியாசமான முடிவுகள் எடுத்துவருகிறார்.

மகாராணியாரின் ஆசை

இளவரசர் பிலிப், எலிசபெத் மகாராணியின் இளைய மகன் இளவரசர் எட்வர்ட். அவருக்கும் Sophie Rhys-Jones என்னும் பெண்ணுக்கும் திருமணம் நடந்தபோது, அவர்களுக்கு வெசெக்ஸ் கோமகன் மற்றும் கோமகள் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

அத்துடன், இளவரசர் பிலிப் மரணமடைந்தபின், மகாராணியாருக்குப் பின் சார்லஸ் மன்னராகும்போது, இளவரசர் பிலிப்பின் பட்டமான எடின்பர்க் கோமகன் என்னும் பட்டம், இளவரசர் எட்வர்டுக்குக் கொடுக்கப்படலாம் என பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மகாராணியாரின் ஆசையை நிறைவேற்றப்போவதில்லை: மன்னர் சார்லஸ் எடுத்துள்ள முடிவின் முக்கிய பின்னணி... | Key Background To King Charles S Decision

Image: 2010 Getty Images

மகாராணியாரின் ஆசைக்கு எதிராக முடிவெடுத்துள்ள மன்னர் சார்லஸ்

ஆக, தங்கள் இளைய மகனான இளவரசர் எட்வர்டுக்கு, எடின்பர்க் கோமகன் என்னும் பட்டம் கொடுக்கப்படவேண்டும் என்பது மகாராணியார் மற்றும் இளவரசர் பிலிப்பின் ஆசையாக இருந்தும், அதை நிறைவேற்றப்போவதில்லை என முடிவு செய்துள்ளார் மன்னர் சார்லஸ்.

ஏற்கனவே, தனது தம்பியாகிய இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் தனது இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோருடன் தனது சகோதரி இளவரசி ஆன் மற்றும் இளவரசர் எட்வர்டை அரசியல் ஆலோசகர்கள் ஆக நியமிக்க முடிவு செய்து, ஹரியோ ஆண்ட்ரூவோ தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கமுடியாதபடி சாமர்த்தியமாக காய் நகர்த்திவிட்டார் மன்னர்.

மகாராணியாரின் ஆசையை நிறைவேற்றப்போவதில்லை: மன்னர் சார்லஸ் எடுத்துள்ள முடிவின் முக்கிய பின்னணி... | Key Background To King Charles S Decision

Image: 2022 Getty Images

இப்போது இளவரசர் எட்வர்டுக்கு எடின்பர்க் கோமகன் என்னும் பட்டத்தைக் கொடுக்காததன் பின்னணியிலும் முக்கியமான காரணம் உள்ளது.

அதாவது, மன்னராட்சியாகவே இருந்தாலும், தன் பிள்ளைகள் எல்லாரும், அவர்களுக்குப் பின் அவர்களுடைய பிள்ளைகள் எல்லாரும் ராஜ குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற நிலையை எட்ட முடியாது என்னும் வகையில் மெதுவாக காய் நகர்த்தி வருகிறார் மன்னர்.

மன்னருக்கு அடுத்த இடத்தில் இளவரசர் வில்லியம் மட்டுமே, ஹரி இல்லை என்பதுபோல, இளவரசர் எட்வர்டுக்கு ஒரு பட்டத்தைக் கொடுக்க, அவருக்குப் பின் அந்த பட்டம் அவரது பிள்ளைகளைச் சென்றடைய என, மன்னராட்சி விரிவாகிக்கொண்டே செல்வதில் மன்னருக்கு விருப்பமில்லை.

மகாராணியாரின் ஆசையை நிறைவேற்றப்போவதில்லை: மன்னர் சார்லஸ் எடுத்துள்ள முடிவின் முக்கிய பின்னணி... | Key Background To King Charles S Decision

Image: 2022 Getty Images

இவ்வளவு பேர்தான் ராஜ குடும்ப உறுப்பினர்கள், இவ்வளவு பேர்தான் முக்கிய முடிவுகள் எடுப்பார்கள், இவ்வளவு பேர்தான் அடுத்த தலைமுறையில் இளவரசர், இளவரசி என அழைக்கப்படுவார்கள் என தீர்க்கமாக திட்டம் தீட்டி வருகிறார் மன்னர்.

அவ்வகையில், தனது தாயின் விருப்பப்படி, தனது தம்பி எட்வர்டுக்கு எடின்பர்க் கோமகன் என்னும் பட்டத்தைக் கொடுத்தால், அவரது மறைவுக்குப் பின் அந்த பட்டம் அவரது மகனாகிய ஜேம்சை சென்றடையும்.

எனவே, இப்படியே பட்டங்கள் தலைமுறை தலைமுறையாக தொடரவேண்டாம் என விரும்புகிறார் மன்னர்.

இன்னொரு விடயம், இந்த விடயத்தை எட்வர்ட் மற்றும் அவரது மனைவி சோபி ஆகியோரிடம் மன்னர் வெளிப்படையாகவே கூறிவிட்டாராம். அவர்களும், தங்கள் பிள்ளைகள் இளவரசராகவோ, இளவரசியாகவோ ஆகப்போவதில்லை என்பதற்கும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மகாராணியாரின் ஆசையை நிறைவேற்றப்போவதில்லை: மன்னர் சார்லஸ் எடுத்துள்ள முடிவின் முக்கிய பின்னணி... | Key Background To King Charles S Decision

Image: 2022 Buckingham Palace



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.