FIFA உலகக்கோப்பை கால்பந்து: பரபரப்பான ஆட்டத்தை டிராவில் முடித்த வேல்ஸ் வீரர்


FIFA உலகக்கோப்பையில் தொடரில் அமெரிக்கா மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

முதல் பாதியில் ஆதிக்கம் 

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டி அல் ரய்யன் மைதானத்தில் நடந்தது.

இதில் அமெரிக்கா – வேல்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் 36வது நிமிடத்தில், அமெரிக்காவின் டிமோத்தி வியா கோல் அடித்தார்.

இதற்கு வேல்ஸ் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால், முதல் பாதியில் அமெரிக்க அணி 1-0 என முன்னிலை வகித்தது.

டிமோத்தி வியா/Timothy Weah

@JEWEL SAMAD/AGENCE FRANCE-PRESSE/GETTY IMAGES

பெனால்டி வாய்ப்பு 

பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் வேல்ஸ் அணி வீரர் காரெத் பாலே (82வது நிமிடம்) பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார்.

அதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

காரெத் பாலே/Gareth Bale

@AFP

இந்தப் போட்டியில் அமெரிக்க அணியில் 4 வீரர்களும், வேல்ஸ் அணியில் 2 வீரர்களும் மஞ்சள் அட்டை பெற்றனர்.

அமெரிக்க அணி 59 சதவீதமும், வேல்ஸ் அணி 41 சதவீதமும் பந்தை தங்களிடம் தக்க வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.   

FIFA உலகக்கோப்பை கால்பந்து: பரபரப்பான ஆட்டத்தை டிராவில் முடித்த வேல்ஸ் வீரர் | Usa 1 1 Wales Draw World Cup 2022

@RYAN PIERSE/GETTY

காரெத் பாலே/Gareth Bale

@Getty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.