இந்தியா அளித்த தங்க பதக்கத்தை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விற்றுவிட்டதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் தெரிவித்தார்.
பாக்., பிரதமராக இம்ரான்கான் பதவி வகித்தபோது, சவுதி மன்னர் அளித்த விலை உயர்ந்த பரிசுகளை அரசு கஜானாவில் அவர் ஒப்படைத்தார். பின், அதை குறைந்த விலைக்கு வாங்கிய இம்ரான் கான், வெளிசந்தையில் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதித்தாககுற்றச்சாட்டு எழுந்தது.
இதில் கிடைத்த வருவாய் குறித்து தன் வருமான வரிக் கணக்கில் இம்ரான் குறிப்பிடவில்லை என சர்ச்சை கிளம்பியது.
பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், ‘டிவி’ நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ”இம்ரான் கான் கிரிக்கெட் வீரராக இருந்த காலகட்டத்தில், இந்தியாவில் அவருக்கு அளிக்கப்பட்ட தங்க பதக்கத்தை அவர் விற்றுவிட்டார்,” என்றார்.
இது தொடர்பாக, பாக்., நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement