இழிவான செயல்களில் ஈடுபட்டு இலங்கைக்கு தப்பி சென்ற பிரித்தானியர்! 20 ஆண்டுகள் கழித்து லண்டனில் மடக்கி பிடிப்பு


இழிவான செயல்களில் ஈடுபட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி லண்டன் விமான நிலையத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் என தெரியவந்துள்ளது.

1990களில் செய்த குற்றங்கள்

பிரித்தானியாவை சேர்ந்தவர் டேவிட் கேரே வில்லியம்ஸ். இவர் 1990களில் 3 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக 10ல் இருந்து 12 வயதுக்குள் இருந்த சிறுமியை துஷ்பிரயோகம் மற்றும் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இதன்பின்னர் காவல்துறையிடம் இருந்து தப்பி Lanzarote தீவுக்கு கடந்த 2000ஆம் ஆண்டு தப்பியிருக்கிறார், பிறகு 2013ல் இலங்கைக்கு சென்றிருக்கிறார்.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் டேவிட் சொந்த நாடான பிரித்தானியாவுக்கு திரும்ப முடிவு செய்த நிலையில் தேசிய குற்றவியல் நிறுவனம் மற்றும் இலங்கை அதிகாரிகளுடன் கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து லண்டனின் Heathrow விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

டேவிட் கேரே வில்லியம்ஸ்

SOUTH WALES POLICE

சிறையில் அடைப்பு

இந்த தகவலை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
கைதுக்கு பின்னர் டேவிட் மீது 10 விதமான வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் எட்டு குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

டேவிட் மேற்கொண்ட மோசமான குற்றங்களுக்கு கார்டிஃப் கிரவுன் நீதிமன்றம் 12 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்திருக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.