ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் சில நாட்களிலேயே உக்ரைன் சரணடைந்துவிட வேண்டும் என ஜேர்மனி விரும்பியதாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அம்பலப்படுத்தியுள்ளார்.
ஜேர்மனியின் நோக்கம் பேரழிவு
ஜேர்மனி மட்டுமின்றி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியும், இறுதி நொடி வரையில் பிரான்ஸ் மறுத்து வந்துள்ளதையும் போரிஸ் ஜோன்சன் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
@SIPA
உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு முன்னர் பல தரப்பிலான கருத்துகள் வெளிவந்தவண்ணம் இருந்தது என கூறும் போரிஸ் ஜோன்சன்,
ஜேர்மனியின் அந்த நோக்கம் நிறைவேனினால், உண்மையில் அது பேரழிவாக இருந்திருக்கும் எனவும்,
ஒருவகையில் மிக விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதும் நீண்ட கால பாதிப்பை குறைக்கும் எனவும் போரிஸ் ஜோன்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அவ்வாறான போக்கு, மிகுந்த பாதிப்பையும் பேரழிவையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனவும், தம்மால் அதன் பின்னணியை புரிந்துகொள்ள முடிந்தது எனவும் போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
மேக்ரான் மீது கடும் விமர்சனம்
பிரான்ஸ் நாட்டை பொறுத்தமட்டில், ரஷ்யா போர் தொடர்பில் கடைசி நிமிடம் வரையில் உக்ரைன் விவகாரத்தில் மிதமான போக்கையே முன்னெடுத்து வந்துள்ளது.
மட்டுமின்றி, உக்ரைன் விவகாரத்தில் இமானுவல் மேக்ரானின் செயற்பாடுகள் கடும் விமர்சனத்திற்கும் இலக்கானது.
@EPA
அத்துடன், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த ஒரு வாரத்திற்கு முன்னர் தான் ஜனாதிபதி புடினை அவரது மாளிகையில் மேக்ரான் சந்தித்துள்ளார்.
இன்னொரு ஐரோப்பிய நாடான இத்தாலியும் உக்ரைன் விவகாரத்தில் கடைசி நொடியில் கைவிட்டதாக போரிஸ் ஜோன்சன் அம்பலப்படுத்தியுள்ளார்.
ரஷ்ய எரிசக்தியை பெரிதும் நம்பியிருப்பதாலையே, இத்தாலி அவ்வாறான முடிவுக்கு வந்துள்ளதாக போரிஸ் ஜோன்சன் வெளிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டுதலுக்குரிய விடயங்களை உக்ரைன் விவகாரத்தில் முன்னெடுத்து எனவும் போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
@EPA
இதனிடையே புடினின் படையெடுப்பிற்குப் பிறகு ஜேர்மனி ரஷ்ய எரிசக்தியை நம்பியிருப்பதைக் குறைக்க முற்பட்டது, ஆனால் தேசம் இன்னும் கடுமையான மின்பற்றாக்குறை மிகுந்த குளிர்காலத்தை எதிர்கொள்கிறது.
மட்டுமின்றி செப்டம்பரில் 173 பில்லியன் பவுண்டுகள் தொகையை எரிசக்தி தொடர்பாக செலவிடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.