வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்: ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என காங்., எம்.பி ராகுல் கூறியுள்ளார்.

ராகுல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இவர் இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் கடந்த செப்., 7ம் தேதி துவக்கினார்.
தமிழகத்தை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் பாதையாத்திரை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று(நவ.,23) 77வது நாள் யாத்திரையை மத்தியப் பிரதேசத்தில் புர்ஹான்பூர் மாவட்டத்தில் தனது பாதயாத்திரையை மேற்கொண்டார்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில், காங்., எம்எல்ஏக்களுடன் புர்ஹான்பூர் வந்திருந்த கமல்நாத் காங்., எம்.பி ராகுல் கொடுத்த தேசியக்கொடியை பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, இது குறித்து காங்., எம்.பி ராகுல் பேசியவதாவது: நாட்டில் இருக்கும் பயம், வெறுப்பு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம், இந்தியாவை நீதியுடன் உருவாக்குவோம்.
வன்முறை என்பது பயத்தின் ஒரு வடிவம்.மேலும், தேசியக்கொடியை ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஏற்றுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement