ஆத்தூர் அருகே தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகள் மதுபானம் அருந்திவிட்டு, மது போதையுடன் தமிழக அரசின் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஐந்து 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மது குடித்து மட்டுமல்லாமல், மது பாட்டிலுடன் அரசு பள்ளிக்கு வந்த ஐந்து மாணவர்களையும், ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த காட்டுக்கோட்டை பகுதியில் தமிழக அரசின் மேல்நிலைப்பள்ளி ஒன்றை இயங்கி வருகிறது .இந்தப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கக்கூடிய ஐந்து மாணவர்கள், பள்ளிக்கு வரும் வழியில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையில் மது வாங்கிய அருந்தியுள்ளனர்.
மதுபோதையில் மிதந்த அந்த மாணவர்கள், மது பாட்டிலுடன் அரசு பள்ளிக்கு வந்துள்ளனர். மேலும், மாணவர்கள் ஐந்து பேரையும் தட்டி கேட்ட ஆசிரியருடனும் தகராறில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஐந்து மாணவர்களையும் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.