லுசைல்: உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தியதை கொண்டாடும் விதமாக இன்று சவுதி அரசு தேசிய விடுமுறை அறிவித்துள்ளது.
கத்தாரில் 22 வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. லுசைல் மைதானத்தில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி, சவுதி அரேபியாவை சந்தித்தது. 10 வது நிமிடத்தில் மெஸ்சி, ‘பெனால்டி’ வாய்ப்பில் ஒரு கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியில் சவுதி அரேபிய அணியின் சலே அல் தேஹ்ரி 48வது நிமிடம் ஒரு கோல் அடிக்க, 53வது நிமிடம் சலீம் அல் தவ்சாரி தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். கடைசி வரை போராடிய போதும் இதைச் சமன் செய்ய அர்ஜென்டினா அணியினரால் முடியவில்லை. முடிவில் அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
சவுதி அரேபிய அணி வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன. . வெற்றியை நாடு முழுதும் கொண்டாடும் விதமாக இன்று ஒரு நாள் தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement