வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என ஐரோப்பிய பாராளுமன்றம் பிரகடனப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர் போர் தொடுத்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போரில் உக்ரைனின் சில மாகாணங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. போரை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
![]() |
இந்நிலையில், பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு ரஷ்யா என ஐரோப்பிய பாராளுமன்றம் இன்று பிரகடனப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விதிமுறைகளை பின்பற்றாமல் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் பெரும்பலான எம்.பி.க்கள் ஆதரவு அளித்தயைடுத்து, ரஷ்யா பயங்கரவாத ஆதரவு நாடு என பிரகடனப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement