லெதர் ஃபேக்டரி ஊழியரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 4 பெண்கள்: பஞ்சாபில் பரபரப்பு!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், நான்கு பெண்கள் கூடி ஒரு நபரை கடத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த அதிர்ச்சிகர சம்பவம் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியில் அரங்கேறியிருக்கிறது.
இது தொடர்பாக புகார் எதுவும் கொடுத்திராத அந்த பாதிக்கப்பட்ட நபர், உள்ளூர் ஊடகத்திடம் பேசியிருக்கிறார். அதில், ஜலந்தரைச் சேர்ந்த அந்த நபர் திருமணமாகி குழந்தையுடன் வசித்து வருவதாகவும், தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அவர், கடந்த திங்களன்று வேலை முடிந்து வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த போது வெள்ளை காரில் வந்த 20 வயது மதிக்கத்தக்க நான்கு பெண்கள் தன் மீது ஏதோ ஸ்பிரே அடித்து கடத்தியதாக கூறியிருக்கிறார்.
கடத்தியதும், அருகே இருந்த ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனத்துக்குள் அழைத்துச் சென்று அங்கு வைத்து தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
image
முகவரி கேட்பது போல ஒரு சீட்டை காட்டிய அந்த பெண்கள், தன் கண் மீது ஸ்பிரே அடித்ததாகவும், நினைவு தெரிந்த பிறகு கண்ணை கட்டி கூட்டிச் சென்றதாகவும் கூறிய அந்த நபர், காட்டுக்குள் அழைத்துச் சென்ற போது, அங்கு வைத்து தனக்கு மதுபானம் கொடுத்ததோடு அவர்களும் மது குடித்ததாகவும் பேசியிருக்கிறார்.
மேலும், தன்னை பாலியல் வற்புறுத்தல் செய்த பிறகு அதிகாலை மூன்று மணியளவில் கண்ணை கட்டியபடி காட்டுக்குள்ளேயே விட்டுச் சென்றுவிட்டார்கள். அந்த நான்கு பெண்களும் அவர்களுக்குள் ஆங்கிலத்திலும் தன்னிடம் பஞ்சாபியிலும் பேசியதாக கூறியுள்ள அந்த நபர், போலீசிடம் புகாரளிக்கலாம் என்றபோது என் மனைவி பயந்து போய் வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், பெண்கள் நால்வர் ஒரு ஆணை பலவந்தமாக கடத்தி பாலியல் கொடுமை செய்த விவகாரம் ஊடகங்கள் மூலம் அம்பலமானதை அடுத்து பஞ்சாப் உளவுத்துறை விசாரணையை தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.