Thunivu: ஒரே ஸ்பாட்டில் ரஜினி – அஜித்; வேகமெடுக்கும் படப்பிடிப்பு வேலைகள்!

பெரிய ஹீரோக்களின் படப்பிடிப்புகளை சென்னையில் நடத்தினால் தான் இங்குள்ள சினிமா தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற பெப்சியின் வலுவான கோரிக்கையினால் ரஜினி உள்ளிட்ட ஹீரோக்கள் பலரின் திரைப்படங்களும் சென்னையில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விஷயம் அதுவல்ல, ரஜினியின் ‘ஜெயிலர்’, அஜித்தின் ‘துணிவு’ இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஒரே ஸ்டூடியோவில் அடுத்தடுத்த தளத்தில் இன்று நடந்திருக்கின்றன.

ரஜினி

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த வாராத்தில் இருந்து ரஜினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் காம்பினேஷனில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துவருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

அதைப் போல, அஜித்தின் ‘துணிவு’, விஜய்யின் ‘வாரிசு’டன் இணைந்து பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் ‘துணிவு’க்காக அஜித்தும் டப்பிங் பேசி முடித்தார். இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியார், சமுத்திரகனி உள்பட பலர் நடித்துள்ளனர். ‘வாரிசு’, ‘துணிவு’ இரண்டும் பொங்கல் வெளீயீடாக அறிவிக்கப்பட்டாலும் கூட இரண்டின் படப்பிடிப்புகளும் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஹெச்.வினோத்துடன் ஜிப்ரான்

இந்நிலையில் இன்று கோகுலம் ஸ்டூடியோவில் ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங்கும், அஜித்தின் ‘துணிவு’ ஷூட்டிங்கும் போய்க் கொண்டிருக்கிறது. இரண்டுமே அருகருகே நடந்து கொண்டிருக்கிறது. ‘ஜெயிலர்’ யூனிட்டில் ரஜினியுடன் ஆல் ஆர்ட்டிஸ்ட் காம்பினேஷன் காட்சிகள் படமாகி வருகிறது. அதைப் போல ‘துணிவு’ பேட்ச் ஒர்க் படபிடிப்பு என்றாலும் கூட, அஜித்தும் இருக்கிறார். இன்னும் ஒருசில நாட்கள் பேட்ச் ஒர்க் போகலாம் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.