சண்டை நிறுத்துங்கள் அல்லது அழிவை சந்திப்பீர்கள்: உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடு ஒன்று எச்சரிக்கை


உக்ரைன் சண்டை நிறுத்த வேண்டும் அல்லது மிகப் பெரிய அழிவை எதிர்நோக்கும் என்று பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் போரில் பெலாரஸ்

ஐரோப்பிய நாடான பெலாரஸ் ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக திகழ்ந்து வருவதுடன், உக்ரைன் மீதான ரஷ்ய போரை ஆரம்பம் முதலே பெலாரஸ் ஆதரித்து வருகிறது.

அத்துடன் போரின் தொடக்க நாட்களில் பெலாரஸ் நாட்டின் எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தினர்.

சண்டை நிறுத்துங்கள் அல்லது அழிவை சந்திப்பீர்கள்: உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடு ஒன்று எச்சரிக்கை | Belarus Urges Ukraine To Stop Fighting Warsoldier of Ukraine – உக்ரைன் படை வீரர்கள்(AFP via Getty Images)

ஆனால் இதுவரை உக்ரைனுடனான மோதலில் நேரடியாக பெலாரஸ் களமிறங்கவோ அல்லது சொந்த படைகளை ரஷ்யாவிற்கு ஆதரவாக களமிறக்கவோ செய்யவில்லை என்றாலும், அது வருங்காலத்தில் மேற்கொள்ளப்படலாம் என்று நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அழிவு உக்ரைன் கையில்

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பெலாரஸ் ஜனாதிபதி  அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்ய போர் தொடர்பான மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில் உக்ரைன் சண்டையை நிறுத்த வேண்டும் அல்லது மிகப்பெரிய அழிவை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று எச்சரிக்கை அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் உக்ரைன்  ஒருவேளை மிகப்பெரிய உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் என்று நினைத்தால் உக்ரைன் கைகளில் தான் இப்போது முழுவதும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் இது மிகவும் கடினமானது தான், சிக்கலானது தான் இருப்பினும் இவற்றை நிறுத்த உக்ரைன் சண்டை நிறுத்த வேண்டும் . இல்லையென்றால் உக்ரைனுக்கு அழிவே ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

எப்படி இருப்பினும் இந்த சந்திப்பில் ஜனாதிபதி  அலெக்சாண்டர் லுகாஷென்கோ போர் தொடங்குவதற்கு உக்ரைன் அல்லது ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தான் காரணம் என்று குற்றம் சாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.