தாம்பரம்: தாம்பரம் அருகே பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அரசு குளிர்சாதன பேருந்தின் மேற்கூரையில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புகை வருவதை கண்ட பயணிகள் கூச்சலிட்டு உடனடியாக பேருந்தில் இருந்து பயணிகளை இறக்கிவிடப்பட்டனர். தண்ணீர் ஊற்றி புகை அணைக்கப்பட்டது. இதனால் தாம்பரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
