தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யா சிவாவுக்கும், கட்சியின் பெண் நிர்வாகியான டெய்சி சரணுக்கும் இடையே நடந்த காரசாரமான உடையாரல் அடங்கிய வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது.
அதில் டெய்சி சரணை, திருச்சி சூர்யா சிவா மிகவும் கேவலமாக பேசியிருந்தது தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ விவகாரம் குறி்த்து தன்னிச்சையாக கருத்து தெரிவித்த காயத்ரி ரகுராம், கட்சியில் இருந்து 6 மாத காலம் நீக்கப்படுவதாக அண்ணாமலை அதிரடியாக அறிவித்திருந்தார்.
கட்சியின் பெண் நிர்வாகியை கேவலமாக பேசியவரை சஸ்பெண்ட் செய்யாமல், அதனை தட்டிக்கேட்ட காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து அண்ணாமலை நீக்கியது ப்ல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி சூர்யா சிவாவும், டெய்சி சரணும் இன்று தமிழக பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் ஆஜராகினர். அவர்களிடம் கிட்டதட்ட மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, இனி இப்படியெல்லாம் நடந்து கொ்ள்ளாதீர்கள் என்ற ரீதியில் அறிவுறுத்தல் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
விசாரணை குழுவுக்கு முன் ஆஜரானதற்கு பின் தி்ருச்சி சூர்யா சிவாவும், டெய்சி சரணும் கட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நாங்க ரெண்டு பேரும் அக்கா -தம்பி போல என்று கூறி. அனைவரும் வியப்பில் ஆழ்த்தினார் டெய்சி சரண்.
அவர் இப்படி சொல்லி சில மணி நேரங்களே ஆகி இருந்த நிலையில், தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளராக இருந்த வந்த திருச்சி சூர்யா சிவா, கட்சியில் இருந்து ஆறு மாத காலத்துக்கு நீக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார்.
யாராக இருந்தாலும் பெண்களை இழிவாக பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது. அதனால்தான் இந்த நடவடிக்கை என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
அதேசமயம் அவர் கட்சியின் மாநில பொறுப்பாளர் பதவியில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும், பாஜகவின் தொண்டராக அவர் கட்சி பணி ஆற்றலாம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் இன்று விசாரணை ஆஜரான திருச்சி சூர்யா சிவாவும், டெய்சி சரணும், சில, பல மணி நேர விசாரணைக்கு பின் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது, திருச்சி சூர்யா சிவாவும், நானும் அக்கா -தம்பி போல என்று டெய்சி சரண் கூறி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
எந்த தம்பி . ஒரு அக்காவை இ்ப்படி கேவலமாக பேசுவார்? அப்போது இந்த விஷயத்தில் பலி ஆடு காயத்ரி ரகுராம் தானா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்ப்டடு வந்தன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் ட்விஸ்ட்டாக சூர்யா சிவா பாஜகவில் இருந்து நீ்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.