நாடு குறித்து சிந்தித்து ,ஆர்பாட்டங்களை நிறுத்த வேண்டும்

நாடு குறித்து சிந்தித்து ஆர்பாட்டங்களை ஒருவருடத்திற்கு அல்லது இரண்டு வருடங்களுக்கு நிறுத்த வேண்டும். அனைத்து நாட்டு மக்களிடமும் இந்த வேண்டுகோளை முன்வைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் முதல் நாளான நேற்று (23) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டம் நடத்தி நாடொன்றை அபிவிருத்தி செய்ய முடியாது. நாட்டுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தால் மாத்திரமே டொலர்கள் வரும். ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சுற்றுலா பயணிகள் வர மாட்டார்கள். அரச நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் பொறுப்பு கூறவேண்டும் என்றும்.பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே பொலிஸ் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுவது தொடர்பில்.எனது மக்கள் என்னிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம்தான் கூறுவார்கள். நான்தான்  அவர்களின் பிரதிநிதி.

கொழும்பு நகரில் வீடு வீடாக சென்று, போலீசார் தனிப்பட்ட விபரங்களை பதிவு செய்கிறார்கள். இதுபற்றி  ஜனாதிபதிக்கு கூறியுள்ளேன். துறைசார் அமைச்சர் உங்களுக்கு கூறியுள்ளேன். பொலிஸ் மா அதிபருக்கு கூறியுள்ளேன்.
பொலிஸ் ஆணைக்குழு தலைவருக்கு கூறியுள்ளேன்.
கீழ்மட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் கேட்டால், ‘மேலிடம் கூறிதான் செய்கிறோம் என்று அவர்கள் எனக்கு கூறுகிறார்கள்.. இன்று சமாதான காலம். இயல்புநிலை காலம்.. . 

கிரிமினல்கள் எங்கேயும் உள்ளார்கள். இங்கே இந்த பாராளுமன்றத்தில் இல்லையா? 
குற்றம் செய்தவர்கள் இருப்பார்களானால், அவர்களை விசாரியுங்கள். கைது செய்யுங்கள். அதில் பிரச்சினை இல்லை. நான் சட்டத்தை மதிக்கும் எம்பி. சட்டத்தின் ஆட்சியை விரும்பும் மனிதன். இங்கே, வீடு வீடாக பொதுவாக போக வேண்டாம் என்பதைதான் நான் கூறுகிறேன். நாடு முழுக்க இது நடக்கவில்லை. கொழும்பில் நடக்கிறது. இது நியாயப்படுத்த முயல வேண்டாம். உண்மையில் இங்கே மக்கள் மட்டத்தில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.