நான் கதைகளை எழுதுவதில்லை, திருடுவேன் – ராஜமவுலி அப்பா

ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்த 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களுக்கு கதை எழுதியவர் விஜயேந்திர பிரசாத். இயக்குனர் ராஜமவுலியின் அப்பாவான விஜயேந்திர பிரசாத் தற்போது கோவாவில் நடைபெறும் 53வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் கவுரவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று துவங்கிய அந்த விழாவில் ஒர்க் ஷாப் ஒன்றை நடத்தினார் விஜயேந்திர பிரசாத். 'த மாஸ்டர்ஸ் ரைட்டிங் பிராசஸ்' என்ற அந்த ஒர்க் ஷாப்பில் பல சினிமா ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அதில் விஜயேந்திர பிரசாத் பேசிய போது, “நான் கதைகளை எழுதுவதில்லை, அவற்றைத் திருடுவேன். கதைகள் உங்களைச் சுற்றியே இருக்கின்றன. ராமாயணம், மகாபாரதம் அல்லது பல நிஜ சம்பவங்கள் என பல இடங்களில் நம்மைச் சுற்றி பல கதைகள் இருக்கின்றன. அவற்றை எடுத்து அதை சுவாரசியமான கதையாக எழுதுவேன்.

நீங்கள் பொய்யை உண்மை போல சொல்ல வேண்டும். யார் பொய்யை நன்றாகச் சொல்கிறார்களோ, அவர்கள்தான் சிறந்த கதை சொல்பவர்கள். நான் கதையை எழுத மாட்டேன், அதைச் சொல்வேன். எனது மனதில் அனைத்துமே இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.