இதுவரையில் அறவிடப்பட வேண்டிய வீட்டு கடனை அறவிடுவதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை வகுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதிகார சபையின் குறைந்த வட்டிக்கு வீட்டு கடனை பெற்றுக்கொண்ட சிலர் அவற்றை வீடுகளை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான கடன்களை பெற்றோர் முதல் தவணை பணத்தை மாத்திரம் செலுத்தியுள்ளனர். இதுதொடர்பாக கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்